Saturday, January 26, 2013

திராவிட கட்சிகளின் கையில் 'தமிழ் திரையுலகம்'!!


'தமிழ் திரையுலகம்' ஆரம்பித்து ஏறக்குறைய 97 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதுவரை திரைத்துறையில் என்ன சாதித்ததோ இல்லையோ; ஆனால், தமிழக அரசியலில் திராவிட கட்சிகளின் நுழைவுக்கு முக்கிய பங்கு ஆற்றிய பெருமை நிச்சயம் உண்டு. இல்லையென்றால், அண்ணாதுரை தொடங்கி கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற முதல்வர்களை இன்று தமிழகம் கண்டிருக்காது. இப்படிப்பட்ட வலிமைமிகுந்த ஒரு துறை, இன்று தன் கூட்டில் வாழும் ஒரு சக கலைஞனை தன்னால் அரசியலில் லாபம் பெற்ற ஒரு திராவிடக்கட்சி குரவலையை நெரிக்கும்போழுது குரல் கொடுக்காமல் இருப்பது மிகவும் வெட்கபடவேண்டிய ஒன்று.

எங்கே போனார்கள் இந்த கதாநாயகர்கள் ரஜினி(கடிதம் எழுதினால் மட்டும் போதாது; தன் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு என்று சொல்லிக்கொண்டு பெருமை பேசுவதேன்?), விஜய், அஜித், விக்ரம்,சூர்யா.......
இன்று இவர்கள் அனைவரும் கதாநாயகியை மட்டும் மோப்பம் பிடிக்கும் சாதாரண பணம் பார்க்கும் கலைஞர்கள் என்று நிரூபித்துவிட்டனர்.


No comments:

Post a Comment